இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் அதற்கான ஒரு தலைநகர் கொண்டு செயல்படுகிறது. அரசின் நிர்வாகம் தலைநகரத்தில் இருந்துதான் செயல்படுகிறது. இருப்பினும், சில மாநிலங்கள் தங்களின் செயல்பாடுகளை பிரித்து இரண்டு, மூன்று தலைநகரங்கள் கொண்டு செயல்படுகின்றன. அந்த மாநிலங்கள் எவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் நிர்வாக ரீதியாக மூன்று தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திரா பிரதேசம் தான். இம்மாநிலத்தின் தலைநகர அமைப்பில், ஒவ்வொரு நகருக்கும் தனித்தனி முக்கிய பங்கு உண்டு. முதலாவது தலைநகரான விசாகப்பட்டினம் இங்கு மாநில செயற்குழு அமைந்துள்ளது. மாநில அரசு இங்கிருந்து அனைத்து நிர்வாகப் பணிகளையும் நடத்துகிறது.
விதிகள், உத்தரவுகள், திட்டங்கள் என அனித்து administrative work இங்கேயே மையமாக கையாளப்படுகிறது. விசாகப்பட்டினம் நகரம், செயல்முறை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கே ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரம். இரண்டாவது தலைநகரான அமராவதி இங்குதான் மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது. இங்கு எம்எல்ஏக்கள் மாநிலத்தின் பிரச்சனைகள் மற்றும் புதிய திட்டங்களை விவாதித்து, சட்டங்களை உருவாக்குகின்றனர்.
அமராவதி, மாநிலத்தின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கான மையமாக விளங்குகிறது. இதன் மூலம், சட்டம் மற்றும் நிர்வாகம் வேறுபட்ட நகரங்களில் செயல்படுகின்றன. மூன்றாவது தலைநகரான கர்னூல் இங்கு மாநில உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. முக்கிய நீதி சம்பந்தமான விசாரணைகள் இங்கே நடைபெற்று, வழக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதன் மூலம், நிர்வாகம், சட்டம், நீதிமன்றம் என்ற மூன்று முக்கிய செயல்பாடுகள் தனித்தனி நகரங்களில் மையமாக்கப்பட்டுள்ளன.



