கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. இதனிடையே தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்..
இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.. மேலும் கரூர் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளதால் விஜய் பாஜக பிடியில் சிக்கி உள்ளதாகவும், அவர் விரைவில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கூறி வந்தனர்.. ஆனால் தவெக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. எனவே அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லாது என்பது உறுதியானது..
இந்த நிலையில் விஜய் இன்னொரு தலைமையை ஏற்று கூட்டணி சென்றால் அவரின் அரசியல் வாழ்க்கையே பூஜ்யமாக மாறும் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.. பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் வேறொருவரின் தலைமையில் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.. திமுக தோற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஆரம்பித்தில் இருந்தே விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று சொன்னார்கள்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று கூறுகின்றனர்.. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜய் தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறிவிட்டனர்..
விஜய் ஹீரோவாக இருப்பதால் தான் இவ்வளவு செல்வாக்கு வருகிறார்.. ஆனால் இவர் வேறொருவரை கை காட்டினால் வாக்குகள் விழுமா? ரசிகர்கள் அவர் பின்னால் செல்வார்களா? விஜய் தனியாக நின்றால் தான் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் வரும்.. இன்னொரு தலைவரின் பின்னால் சென்றால் அந்த வாக்கு வராது.. விஜய் தலைமையில் கூட்டணி வந்தால் அது வேறு.. விஜய் இன்னொரு தலைமையை ஏற்று கூட்டணிக்கு சென்றால் இவரின் ஹீரோ ஸ்டாண்டே காலியாகிவிடும்.. இவரின் அரசியல் வாழ்க்கையே பூஜ்யமாகி விடும்.. அதனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.” என்று தெரிவித்தார்..
Read More : கரூர் துயரம்.. விஜய் பேருந்தின் CCTV காட்சிகள் சிபிஐ வசம் ஒப்படைப்பு.. முக்கிய ஆதாரங்கள் சிக்குமா?



