வாக்களிக்கும்போது விரலில் ஏன் மை வைக்கப்படுகிறது தெரியுமா?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

நாம் வாக்களிக்கும்போது இடது கையின் பெருவிரலில் ஊதா நிற மை வைப்பார்கள். இதை நாம் செல்ஃபியோ அல்லது புகைப்படமோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒரு விரல் புரட்சி, ஜனநாயக கடமையாற்றிவிட்டேன் என்றெல்லாம் கேப்சன் இட்டு பதிவிடுவோம். ஆனால், இந்த மை ஏன் வைக்கப்படுகிறது? இதை ஏன் அழிக்க முடியாது?. இதன் சுவாரசிய பின்னியை பார்க்கலாம்..!

1962 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போதுதான் முதன்முதலாக விரலில் மை வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அடையாள அட்டைகள் அனைவரிடமும் இல்லாததால் வாக்களித்த ஒருவர் மீண்டும் வாக்களிக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த மை வைக்கப்பட்டது.

தற்போது வாக்களார் அட்டை வழங்கியும் கள்ள ஓட்டு மோசடிகள் நடைபெறுவதால் இன்றும் மை வைக்கும் விதிமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கு முன், இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் மை வைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு முதல்தான் கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டது. எம்.எல். கோயல் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீல நிற மையை கண்டுபிடித்தது.

கர்நாடகாவில் உள்ள ” மைசூர் பெயிட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் “ எனும் மாநில அரசு நிறுவனம்தான் இதற்கான மையை தயாரிக்கிறது. இந்த மையில் சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை.

அந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. பின் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் புதிய செல்கள் உற்பத்தியாவதால் பின்னர் மை முற்றிலுமாக மறைந்துவிடுகிறது. இந்த மையை இந்தியா மட்டுமல்லாது கனடா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.

Read More: யுபிஎஸ்சி டாப்பர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவின் போலி டெஸ்ட் பேப்பர் வைரல்!…

Baskar

Next Post

போர் பதற்றம் காரணமாக விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா!

Fri Apr 19 , 2024
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் காரணமாக டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை ஏப்ரல் 30 வரை நிறுத்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் சில தினங்களுக்கு முன்பு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் ஈரான் இடையே நாளுக்கு […]

You May Like