அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறுகிறதா..? வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்..!!

நம்மில் பலருக்கு அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறும். நடக்கும்போது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள். கைகளில் அதிகளவு வியர்க்கும்போது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய். பயம், பதட்டம் ஏற்படும்போது கை, கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும். இவ்வாறு வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

* ஒரு கப் அளவு சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயை கொண்டு கை, கால்களை சுத்தம் செய்தால் வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.

* அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் ஊற்றி கை, கால்களை சுத்தம் செய்து வந்தால் வியர்வை பிரச்சனை சரியாகும்.

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கை, கால்களை சுத்தம் செய்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 சூடத்தை தூள் செய்து கலந்து விட வேண்டும். பிறகு அதில், கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்தால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும்.

Read More : செம குட் நியூஸ்..!! இனி இவர்களுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கும்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Chella

Next Post

’இனி இவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம்’..!! சூப்பர் அறிவிப்பு வெளியீடு..!!

Thu Apr 25 , 2024
இந்தியாவில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65ஆக இருந்தது. தற்போது இந்த வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நீக்கியுள்ளது. அதாவது, இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம் என அறிவித்துள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்ட அறிவிப்பில், ”அனைத்து வயதினருக்கும் […]

You May Like