தினமும் இரவில் நைட் க்ரீம் யூஸ் பண்றீங்களா?. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!. எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?.

night cream 11zon

Night cream: தினமும் இரவில் முகத்துக்கு க்ரீம் தடவ வேண்டுமா… அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்…. நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா… எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து தெரிந்துகொள்வோம். தினமும் காலையில் எழுந்ததும் முகம் கழுவுவது, குளிப்பது, பிறகு மேக்கப் செய்துகொள்வது என சில விஷயங்களை ரொட்டீனாக செய்கிறோம். அதைப் போலவே நைட் ரொட்டீனும் மிக முக்கியம். உங்கள் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து நைட் க்ரீம், சீரம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.


இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அன்றைய தினம் சருமத்துக்கு உபயோகித்த சன் ஸ்கிரீன், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டியது மிகமிக முக்கியம். முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். மேக்கப் போடும்பட்சத்தில் டபுள் கிளென்ஸ்கூட செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். இப்படி முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்துக்கு மீண்டும் அதற்கான மாய்ஸ்ச்சரைசரை கொடுக்க வேண்டும். இதுபோன்றதொரு நைட் ரொட்டீன் அனைவருக்கும் அவசியம்.

நைட் க்ரீமில் பல வகைகள் உள்ளன. எது, யாருக்கு என்பது வயதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 20 முதல் 25 வயது வரை வெறும் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் போட்டாலே போதுமானதாக இருக்கும். பருக்கள், மங்கு போன்ற ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்தப் பிரச்னைக்கேற்ற நைட் க்ரீமை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் என இவற்றை ஆக்டிவ்ஸ் என்று சொல்வோம். எந்தப் பிரச்னைக்கான ஆக்டிவ் என்பது தெரிந்து அது உள்ள நைட் க்ரீமை பயன்படுத்தும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. சருமம் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கும். ஆனாலும், வயதாக, ஆக அந்தத் தன்மை குறைய ஆரம்பிக்கும். வெளிப்புறத்திலிருந்து அதைக் கொடுக்கும்விதமாக ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிக்கலாம். ஆன்டிஏஜிங் தன்மை உள்ளது என்றால், அதில் ரெட்டினாலுக்கு முதலிடம் உண்டு.

வயதுக்கேற்ப அதன் சதவிகிதம் மாறும். அதைப் பயன்படுத்தவென குறிப்பிட்ட வழிகளும் உள்ளன. சரும மருத்துவரை அணுகினால், உங்களுக்கான சரியான நைட் க்ரீமையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்வார். சீரம் என்பது நிறைய நல்ல தன்மைகளைக் கொண்ட சிறிய அளவிலான திரவ வடிவில் இருக்கும். இதை மிகக் குறைவாக உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும். சுத்தமான சருமத்தில் முதலில் சீரம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்தில் ஊடுருவிய பிறகு ஹைட்ரேட்டிங் தன்மையுள்ள மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் உபயோகிக்கலாம்.

Readmore: முடி வேகமாக வளரனுமா?. இரவில் இந்த ஈஸி டிப்ஸை பாலோ பண்ணுங்க!.

English Summary

Do you use a night cream every night? How should you choose one?

1newsnationuser3

Next Post

மனைவி, காதலிகளுடன் கைதிகள் உல்லாசம்..!! நட்சத்திர ஓட்டலில் காவல் காத்த காவல்துறை..!! திடுக்கிட வைக்கும் தகவல்..!!

Tue May 27 , 2025
The important thing is that all 4 prisoners have invited their wives and girlfriends and are having fun.
Hotel Room 2025

You May Like