தமிழகத்தில் வீடு, நிலம் அல்லது கடை போன்ற சொத்துகளை வாங்கும் போது, அந்த சொத்துடன் இணைந்த மின்சார இணைப்பின் பெயரையும் புதிய உரிமையாளரின் பெயரில் மாற்றுவது வழக்கம். இதற்காக இதுவரை மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
இந்த நடைமுறை சிரமமானதுடன், பொதுமக்களுக்கு நேரமும் வீணாகி வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தற்போது மின்சார இணைப்பு பெயர் மாற்றத்தை முழுமையாக ஆன்லைனில் செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே சில எளிய படிகளைப் பின்பற்றுவதன் மூலம், மின் இணைப்பின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
ஆன்லைனில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
* முதலில் TANGEDCO வின் அதிகாரப்பூர்வ தளமான https://tangedco.gov.in அல்லது https://tnebltd.gov.in சென்று, Consumer Services → Apply Online → Name Transfer (Ownership Change) என்பதைக் கிளிக் செய்யவும்.
* புதிய பக்கம் திறந்தவுடன், Service Connection Number (SC No.), மொபைல் எண், ஆதார் எண் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை உள்ளிட்டு, OTP மூலம் சரிபார்க்கவும்.
* அதன் பிறகு பின்வரும் ஆவணங்களை PDF வடிவில் இணைக்க வேண்டும்:
- சொத்து உரிமை ஆவணம் (Sale Deed / Gift Deed / Lease Agreement)
- விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
- முந்தைய உரிமையாளர் கடைசி மின் கட்டண ரசீது
- மரணச் சான்றிதழ் (முந்தைய உரிமையாளர் உயிரில் இல்லையெனில்)
- முன்பு தேவைப்பட்ட No Objection Certificate (NOC) தற்போது கட்டாயமில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
* விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ₹100 முதல் ₹200 வரை கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
* பின்னர் Track Application Status பகுதியில் விண்ணப்ப எண் மூலம் முன்னேற்றத்தைப் பார்க்கலாம். சரிபார்ப்பு முடிந்தவுடன் புதிய பெயர் அடுத்த மின் கட்டண ரசீதில் தானாகவே சேர்க்கப்படும்.
* உதவி தேவைப்பட்டால் TANGEDCO அழைப்பு மைய எண் 1912 அல்லது மின்னஞ்சல் முகவரி cmd@tnebnet.org மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Read more: அப்ப பிள்ளையார் சுழி போடலயா? தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அந்தர் பல்டி அடித்த இபிஎஸ்..!



