செய்தியாளர் சந்திப்பின் போது ஹிந்தியில் பேச மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
90களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல்.. ஷாருக்கானுடன் கஜோல் நடித்த பல படங்கள் எவர்கிரீன் ஹிட் படங்களாக மாறினா.. இன்றும் பலரின் ஃபேவரைட் நடிகையாக கஜோல் வலம் வருகிறார்.. இவர் தமிழில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடி நடித்தார்.. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலு பிரபலமானார் கஜோல்.. எனினும் அதன்பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கவனம் பெற்ரார்..
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது ஹிந்தியில் பேச மறுத்ததால் நடிகை கஜோல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் 2025 விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கஜோல் தனது தாயார் மற்றும் மூத்த நடிகை தனுஜாவுடன் அங்கு வந்தார். இந்த விழாவில் கஜோலும் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடன் கேள்விக்கு கஜோல் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிலளித்து வந்தார்.. அப்போது ஒரு நிருபர், ஹிந்தியில் பதில் சொல்லுங்கள் என்று கேட்ட போது கஜோல் கோபமடைந்தார்.. மேலும் “நான் இப்போது ஹிந்தியில் பேச வேண்டுமா? புரிந்து கொள்ள விரும்புபவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து சமூக ஊடக பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. ஒருவர் தனது பதிவில் ‘அவர் ஹிந்தி படங்கள் மூலம் நடிகையானார், இல்லையெனில் அவர் எங்கே இருந்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை… இப்போது மராத்தி பேசி கதாநாயகியாக மாறுகிறார். வெட்கமாக இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தனர்.
மற்றொரு பயனர் ‘ ஹிந்தி பேசுவதற்கு அவருக்கு சங்கடமாகவும் வெட்கமாகவும் இருந்தால், அவர் பாலிவுட் இந்தி படங்களில் பணிபுரிவதை நிறுத்த வேண்டும். அவர் தனது இரட்டைத்தன்மையை கைவிட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
வேறொரு பயனர், ‘இந்திய சினிமாவும் ஹிந்தி படங்களும்தான் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. அவர்கள் இந்தி அல்லாத படங்களைத் தயாரிக்க வேண்டும், படத்தைப் புரிந்துகொண்டு பார்க்க விரும்புவோர் அதைப் பார்க்கலாம்” என்று மற்றொருவர் கூறினார்.
இந்த சர்ச்சை குறித்து கஜோல் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.. சமீபத்தில் மகாராஷ்டிர அரசியலில் ஹிந்தி – மராத்தி மொழி சர்ச்சை வெடித்துள்ளது.. காரணமாக கஜோலின் இந்த பதில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது..
Read More : காதலை சொல்ல ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா ஏமாற்றத்துடன் திரும்பிய சூப்பர் ஸ்டார்.. ஏன் தெரியுமா?