உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா..? அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

பொதுவாக பல குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். ஆனால், நாளடைவில் பல குழந்தைகள் தாங்களாகவே அதனை மறந்து விடுவார்கள். ஆனால், ஒரு சில குழந்தைகள் அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பார்கள். உங்கள் குழந்தையும் கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தால், கவலை வேண்டாம். அந்தப் பழக்கத்தை போக்கக் கூடிய சில எளிய டிப்ஸ் இதோ, உங்களுக்காக..!


— உங்கள் குழந்தைக்கு கட்டை விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அதனைப் போக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கட்டை விரலில் எலுமிச்சை சாறு போன்ற புளிப்பான ஒன்றை அவர்களின் கட்டை விரலில் தடவி விடுங்கள். குழந்தைக்கு கட்டை விரலை சப்பக் கூடாது என்று நினைவூட்டினால், அவர்கள் கைகளை எடுத்து விடுவார்கள். அதற்கு பதில் இவ்வாறு எலுமிச்சை சாற்றைத் தடவினால், அது கட்டை விரலை சப்பக் கூடாது என்று அவர்களுக்கு நினைவூட்டும்.

— கட்டை விரல் சூப்பும் பழக்கம் ஒரு தீய பழக்கம் என்று உங்கள் குழந்தைக்கு தெரியும். அதனால், குழந்தையிடம் இது குறித்து நீங்கள் பேசலாம். நீ ஏன் கை சூப்புகிறாய் என்று மிரட்டாமல் ஆச்சரியமாக அவர்களிடம் கேளுங்கள். உங்கள் குழந்தை வாயில் இருந்தே நீங்கள் அவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டி, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க ஊக்குவிக்கலாம்.

— உங்கள் குழந்தைக்கு கை சூப்பும் பழக்கம் இருந்தால், நீங்கள் தான் அதனை மறக்கடிப்பதற்கு மெனெக்கெட வேண்டும். இது ஒரு சவாலான செயல் தான் என்றாலும், நீங்கள் அவர்களுக்குப் பிடித்த வேறு செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த பழக்கத்தில் இருந்து மீட்கலாம். கைகளை பயன்படுத்தும் விதத்தில் வரைதல், கிராஃப்ட்ஸ், விளையாட்டுக்கள் என அவர்களை பிஸியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் அறிவை வளர்ப்பதோடு, இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடவும் உதவியாக இருக்கும்.

— சில குழந்தைகள் பசியாக இருக்கும் போது விரல் சூப்புவார்கள். அதனால், நீங்கள் அவர்களின் தினசரி உணவில் கவனம் செலுத்த வேண்டும். பசி எடுக்கும் போது, அவர்கள் விரலை சூப்புவதற்கு முன்னரே சத்தான ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

— உங்கள் குழந்தை எந்த நேரத்தில் விரல் சூப்புகிறார்கள் என்பதை கவனியுங்கள். சில குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் விரல் சூப்புவார்கள். அதனால், நீங்கள் வேறு விதங்களில் அவர்களை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். இரவில் பல் தேய்ப்பதற்கு முன், ஒரு கப் வெது வெதுப்பான பால் அல்லது ஹெர்பல் டீ குடுக்கலாம். மறுபுறம், குழந்தை பதட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கை சூப்பினால், அவர்களின் பதட்டத்திற்கான காரணம் அறிந்து பதட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

CHELLA

Next Post

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்கள்….! விண்ணப்பம் செய்ய நாளையே கடைசி தேதி உடனே முந்துங்கள்….!

Mon May 8 , 2023
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு UPSC CMS 2023 அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்-1261கல்வி தகுதி-MBBS தேர்ச்சிதேர்வு நடைபெறும் நாள்-ஜூலை 16விண்ணப்பம் செய்ய கடைசி நாள்- மே 9 மேற்கொண்டு இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பம் செய்ய upsc.gov.in என்ற இணையதள முகவரியை […]
jobless istock 1074383 1643093695 1160333 1667875451 1171909 1671076006 1183731 1674463405

You May Like