EWS 10% இட ஒதுக்கீடு… 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் குழு அமைக்கப்பட்டது…!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கூறி வருகின்றன. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கொடுத்திருக்கிறார்.

ஆனால், 2005-06ல், காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010-ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு, கேரளாவில் அதை அமல்படுத்தியும் உள்ளது. அதேபோல கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

வீட்டிலேயே வளர்க்கப்படும் முக்கிய 2 மூலிகைகள் பயன்பாடு…

Tue Nov 8 , 2022
நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளின் பண்பை தெரிந்து பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் உத்திகளைக் கையாண்டு வந்தனர். இன்று நம்மைச் சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும் நமக்கு பயன்தெரியாது. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன.  வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ, தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியிலோ மூலிகைப்பூங்கா அமைத்தால் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் […]

You May Like