“சுயநலமா இருக்காதீங்க”..!! “கூட்டணிக்கு வராவிட்டால் முகத்திரை கிழியும்”..!! OPS-ஐ பகிரங்கமாக எச்சரித்த டிடிவி தினகரன்..!!

OPS TTV 2026

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.


“மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய வேண்டிய இக்கட்டான நேரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்?” என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், சுயநலத்தை துறந்து இப்போதே கைகோர்க்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் இன்னும் தெளிவுபடுத்தாத நிலையில், “இப்போது வராவிட்டால் அவர்களின் முகத்திரை கிழியும்” என தினகரன் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒற்றுமை என்ற வார்த்தையைத் தற்காப்புக்காகவும், சுயநலத்திற்காகவும் பயன்படுத்தியவர்கள் யார் என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி முடிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என தினகரன் சாடியுள்ளார்.

Read More : அடிதூள்..!! வங்கிக் கணக்கில் மீண்டும் ரூ.5,000..!! பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்..!! திமுக அரசின் மாஸ் பிளான்..!!

CHELLA

Next Post

ஏஜெண்டுகளின் அராஜகத்திற்கு எண்ட் கார்டு போட்ட RBI..!! இனி நள்ளிரவில் போன் வராது..!! 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்..!!

Sat Feb 14 , 2026
இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது. தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. […]
RBI 2026

You May Like