தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவை என்பதைக் கவனத்தில் கொண்டு, இனிமேல் மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெற வருபவர்களை ‘நோயாளி’ என அல்லாது ‘மருத்துவப் பயனாளி’ என குறிப்பிடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் ‘நோயாளிகள்’ என அல்லாமல் ‘மருத்துவப் பயனாளிகள்’ என குறிப்பிடப்பட வேண்டும்” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவை இந்த ஆட்சியின் “இரண்டு கண்கள்” என வலியுறுத்தியிருந்தார். அவர் மேலும், “மருத்துவப் பணியாளர்கள் மக்கள் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட வேண்டும். முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தினரைப் போலவே பரிவுடன் கவனிக்க வேண்டும்” என்று கூறியிருந்த நிலையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read more: இன்று 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..