டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் சைபர் கிரைம் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 13,951 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.. இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகளுக்கு மத்தியில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பு குறிப்புகளை வழங்கி உள்ளது..

அந்த வகையில் UPI பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக பயன்படுத்த சில UPI பாதுகாப்பு குறிப்புகளை எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ வங்கி “UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது இந்த UPI பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளது..
UPI பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்க எஸ்பிஐ வழங்கிய டிப்ஸ்
- பணத்தைப் பெறும்போது UPI பின்னை உள்ளிட வேண்டியதில்லை.
- நீங்கள் பணம் அனுப்பும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும்.
- தெரியாத கலக்ஷன் கோரிக்கையை ஏற்க வேண்டாம்.
- உங்கள் UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
- QR மேற்கோள் மூலம் பணம் செலுத்தும் போது பயனாளியின் விவரங்களை எப்போதும் சரிபார்க்கவும்.
- உங்கள் UPI பின்னை வழக்கமாக மாற்றவும்.