இனி பழைய பிரஷ்களை தூக்கி எறியாதீர்கள்!. மீண்டும் பயன்படுத்துவது எப்படி?

old tooth brushes 11zon

மக்கள் பொதுவாக பழைய மற்றும் சேதமடைந்த பல் துலக்கும் பிரஷ்களை பயனற்றவை என்று கருதி தூக்கி எறிவார்கள். ஆனால் அவற்றை சுத்தம் செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். 2-3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் தனது பிரஷ்களை மாற்ற வேண்டும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் அனைவரின் வீடு மற்றும் குளியலறை ரேக்கிலும் பல பிரஷ்கள் பயனற்றவையாகக் கிடக்கின்றன. ஆனால் இதை வீட்டின் பல சிறிய மற்றும் பெரிய பணிகளில் ஒரு சூப்பர் ஹீரோவைப் போலப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஜன்னல் விளிம்புகள், கேஸ் பர்னர், டைல் விளிம்புகள் போன்ற இடங்களை பழைய மற்றும் சேதமடைந்த பிரஷ்களை கொண்டு சுத்தம் செய்யலாம், இந்தக் கட்டுரையில், பழைய பிரஷ்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். ஓடுகள், தரை, குளியலறை, சிங்க், பேசின் மற்றும் குழாய் ஆகியவற்றின் ஓரங்களில் குவிந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்தலாம். இதற்காக, முதலில் கத்தியை சூடாக்கவும். பின்னர் பிரஷின் மேல் பகுதியை வெட்டி பிரிக்கவும்.இதையடுத்து பிரஷின் கீழ் குச்சியை லேசாக சூடாக்கி, அதன் மீது மேல் பகுதியை ஒட்டவும்.

ஜன்னலின் ஓரத்தில் குவிந்துள்ள அழுக்குகளை அகற்றுவது ஒரு கடினமான பணி. ஜன்னலை ஆழமாக சுத்தம் செய்வதற்காக மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் பழைய பல் பிரஷ்களைப் பயன்படுத்தி அதை சுத்தம் செய்யலாம். பழைய பிரஷ்களைப் பயன்படுத்தி, காலணிகளின் உள்ளங்கால்கள் மற்றும் விளிம்புகளை சுத்தம் செய்து பளபளப்பாக்கலாம் . பெரும்பாலும் காலணிகளின் விளிம்புகள் மற்றும் தையல் பகுதிகளில் தூசி, சேறு மற்றும் அழுக்குகள் குவிந்துவிடும், இதை துணி அல்லது கையால் சுத்தம் செய்வது கடினம். அத்தகைய சூழ்நிலையில், பிரஷ்கள் உங்களுக்கு உதவும். பூனை, நாய் அல்லது முயல் இருந்தால், பழைய பல் துலக்குதலை அழகுபடுத்தும் கருவியாகப் பயன்படுத்தலாம்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கிரேயான்ஸ், சாக்குக் கட்டிகள் மூலமாக குழந்தைகள் கிறுக்கி வைத்திருந்தால் அதை வெறும் துணியால் துடைத்தால் சுத்தமாக போகாது. அந்த சமயத்தில் பழைய டூத் பிரஷால் அதை தேய்த்து துடைத்தால் சட்டென போய்விடும்.

தங்கமோ,வெள்ளியோ, கவரிங் நகைகளோ அவற்றை சுத்தம் செய்யாமல் அணிவதால் தோல் வியாதிகள் ஏற்படுவதுடன் நகைகளும் மங்கலாக இருக்கும். சிறிதளவு தண்ணீரில் சோப்பு பவுடரைப் போட்டு அதில் நகைகளை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து நகைகளில் இடுக்குகளை மென்மையாக டூத் பிரஷால் தேய்க்கும் போது நகைகள் சுத்தமாகிப் பளிச்சிடும்.

என்னதான் புருவம், மீசை இவற்றை நேர்த்தியாக வைத்திருந்தாலும் அவற்றை பிரஷ் செய்ய தவறிவிடுகிறோம். தவறாமல் சுத்தமான பிரஷால் அவற்றை சரி செய்யும் போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கின் மூலமாக நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வெதுவெதுப்பான நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்து பின்னர் பிரஷால் மெதுவாக நக இடுக்குகளில் சுத்தம் செய்ய நகங்கள் பளிச்சென அழகாகும்.

டூவீலர் மற்றும் கார்களில் கைகள் நுழையாத பகுதிகளில் பிரஷை விட்டு சுத்தம் செய்யலாம். செயினுக்கு எண்ணெய் போடுவதென்றால் பிரஷ் சீராக தடவ உதவும். கார் டேஷ் போர்டுகளில் உள்ள குறுகலான பகுதிகளியும் சுத்தம் செய்யலாம். எண்ணெய் பசை படித்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்ய பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா, சோப்பு பவுடர் இரண்டையும் கலந்து வெந்நீரில் நனைத்த பிரஷால் தொட்டு தேய்க்க, எண்ணெய் பசை கொண்ட பகுதிகள் பளிச்சென காணாமல் போய்விடும்.

அடிக்கடி அழுக்காகும் ஒரு பொருள் சீப்பு. அதை சுத்தம் செய்வதற்குள் படாத பாடுபடுவோம். சூடான நீரில் சோப்பு பவுடரை கலந்து அதில் சீப்பை மூழ்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் வைத்து தேய்க்க சீப்பு புதிது போலாகிவிடும்.

Readmore: கடவுளுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நன்மையா?. பூ இருந்தால் என்ன அர்த்தம்?

KOKILA

Next Post

இரவில் எத்தனை மணிக்கு தூங்க வேண்டும்? வயதுக்கேற்ற சரியான தூக்க நேரம் என்ன?

Tue Jun 10 , 2025
தூக்கம் மற்றும் விழித்திருக்கும் வழக்கம் சரியாக இருந்தால், நீண்ட காலத்திற்கு நோய்களைத் தவிர்க்கலாம். நமது உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் உடலை விழித்தெழுந்து சூரிய ஒளியுடன் ஒத்திசைவாக தூங்கச் சொல்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் மறைந்தவுடன், தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் மெலடோனின் உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த இயற்கை சமிக்ஞை புறக்கணிக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த சுழற்சி சீர்குலைந்து, தூக்கத்தின் […]
light sleep 11zon

You May Like