இனிமேல் இந்த பொருட்களை தூக்கி எறியாதீர்கள்!… சமையலறை ரகசியத்தை பயன்படுத்துங்கள்!… சில டிப்ஸ்!

சமையலறையில் தூக்கி எறியப்படும் பொருட்களை எவ்வாறு உபயோகமுள்ளதாக்குவது என்பது குறித்த சில எளிய டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


சமையலறையில அல்லாது வீட்டு பயன்பாட்டு பொருளிலோ ஏதாவது மீதம் இருந்தால், ஏதாவது ஒரு முறையில் அதை பயன்படுத்தலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால், சில சமயங்களில் நாம் நமக்கு தெரியாமலே வீணடிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அப்படி எதையெல்லாம் வீணடித்தோம் என்றும்,இனிமேல் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பார்ப்போம். அந்தவகையில் நாம் நமது வீடுகளில் பெரும்பாலும், உணவுகளில் உருளைக்கிழங்கை சேர்ப்பதுண்டு. அவ்வாறு நாம் அவித்த உருளைக்கிழங்கை தோலுரித்து சமையல் செய்வதுண்டு. அவ்வாறு நாம் உரிக்கும் உருளைக்கிழங்கு தோலை வைத்து கண்ணாடிகளை துடைத்தால் அது பளபளப்பாகும்.

நாம் நமது வீடுகளில் அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்ப்பதுண்டு. அதே போல், சில சாப்பாடுகளில் கொத்தமல்லி சேர்ப்பதுண்டு. இந்த இலைகளை வாங்கி நாம் ஒருசில நாட்கள் அதிகமாக வைத்திருந்தால், அது காய்ந்து விடும்.அந்த இலைகள் காய்ந்து போகாமல் இருக்க காய்ந்த இலைகளை இட்லி சட்டியில் உள்ள நீரில் போட்டு அவித்தால், அது நல்ல மணமுடன் காணப்படும்.நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயை சாப்பாட்டிற்காக பாலை பிழிந்துவிட்டு, சக்கையை தூக்கி எறிவதுண்டு. ஆனால் அவ்வாறு அந்த சக்கையை தூக்கி எரியாமல், அதில் கலர்பொடியை சேர்த்து கலந்து, அதை வைத்து கோலம்போட்டால், கோலம் சிறப்பான அழகுடன் காணப்படும்.நாம் தினமும் அரிசி கழுவும் தண்ணீரை வெறும் தரையில் ஊற்றி விடுவோம். அவ்வாறு நீரை வீணாக்காமல், நமது வீடுகளில் உள்ள செடிகளுக்கு கீழே ஊற்றினால் செடி செழிப்பாக வளரும்.

KOKILA

Next Post

திருமாவளவன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு...! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

Sun May 14 , 2023
விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு இருந்த வீரப்பன் என்பவர் உள்ளிட்ட10 பேர் தன்னை தாக்கியதாகவும், 2 லட்சம் […]
images 2023 05 14T060908.636

You May Like