தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை… 15 மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டென கொட்டும்!!

தமிழ்நாட்டில் இன்று 15தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.இதனால் மழையின் தீவிரம் சற்று அதிகமாகவே உள்ளது.

தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரத்திற்கு பின்னர் கனமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருகின்றது. கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இன்றும் மழை தொடர உள்ள நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்து உள்ளது. நாளை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஆகிய மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிகக் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

நாளை வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 -33 டிகிரி செல்சியஸ்  வெப்பம் இருக்கும். குறைந்த பட்சம் 25-26 வரை இருக்கும் என கணித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேமூட்டமாக இருக்கும். மாலைக்கு பின்னர் மழை பெய்யத்தொடங்கும். இரவில் இடியுடன் பலத்த மழை பெய்யும்.

Next Post

டெல்லி அணிக்கு தாவும் ஜடேஜா..!! அங்கிருந்து 2 முக்கிய வீரர்களை கேட்கும் சிஎஸ்கே..!! பரபரப்பு தகவல்..!!

Sun Oct 30 , 2022
ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் செய்ய சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். இதனால், சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்தது. இதனையடுத்து, தொடரின் பாதியில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து […]
டெல்லி அணிக்கு தாவும் ஜடேஜா..!! அங்கிருந்து 2 முக்கிய வீரர்களை கேட்கும் சிஎஸ்கே..!! பரபரப்பு தகவல்..!!

You May Like