7 மாதங்களில் 35 கிலோ எடையைக் குறைத்த நேஹா என்ற பெண், தனது எடை இழப்பு பயணத்தின் போது தவிர்த்த 10 உணவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்றைய மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்கள் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.. எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, டயட் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. வலிமை பயிற்சி மற்றும் கார்டியோ ஆகியவை எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் தூண்களாக கருதப்படுகின்றன.. ஆனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தவில்லை என்றால் அவை அனைத்தும் வீணாகிவிடும்.
கொழுப்பைக் குறைக்க உதவுவதில் உங்கள் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. 7 மாதங்களில் 35 கிலோ எடையைக் குறைத்த நேஹா என்ற பெண்ணும் இதையே கூறியுள்ளார். தனது எடை இழப்பு பயணத்தின் போது தவிர்த்த 10 உணவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது உணவில் இருந்து சில உணவுப் பொருட்களை நீக்குவது எப்படி எடை குறைக்க உதவியது என்று நேஹா கூறியுள்ளார். மேலும் “நீங்கள் எடை இழக்க விரும்பினால், இந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்..
கிரானோலா
கிரானோலா என்பது ஒரு பிரபலமான காலை உணவு மற்றும் சிற்றுண்டி உணவாகும், இதில் முதன்மையாக ரோல்ட் ஓட்ஸ், நட்ஸ் , விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் உள்ளன. ஆரோக்கியமானதாக சந்தைப்படுத்தப்படும் கிரானோலாவில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் நிறைந்துள்ளன.
சுவையூட்டப்பட்ட தயிர்
இன்சுலினை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும் மறைக்கப்பட்ட சர்க்கரைகள் அவற்றில் அதிகம் உள்ளன. எனவே இது ஆரோக்கியமானதும் இல்லை.. உடல் எடையை குறைக்கவும் உதவாது..
பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள்
பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் நார்ச்சத்து நீக்கப்பட்டு சர்க்கரையால் நிரம்பியுள்ளன. அவை சோடாவை விட மோசமானவை. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்..
டயட் கோக், பேக் செய்யப்பட்ட சிப்ஸ்
இந்த சிற்றுண்டிகள் தங்களை ஆரோக்கியமானவை என்று சந்தைப்படுத்தினாலும், அவை இன்னும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் அதிக அளவில் பதப்படுத்தப்படுகின்றன என்று நேஹா சுட்டிக்காட்டினார்.
புரத பார்கள்
புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த பிரபலமான வசதியான உணவாக புரத பார்கள் உள்ளன. அவை பெரும்பாலும் ஆரோக்கியமான சிற்றுண்டி என சந்தைப்படுத்தப்படுகின்றன.. ஆனால் இந்த புரத பார்கள் வெறும் இனிப்பு மட்டுமே உள்ளன.. இதில் எந்த ஆரோக்கிய நன்மைகளும் இல்லை..
தேன் மற்றும் வெல்லம்
இயற்கையான சர்க்கரை என்றாலும் தேன், வெல்லத்திலும் அதிக சர்க்கரை உள்ளது.. வெள்ளை சர்க்கரையைப் போலவே இன்சுலின் ஸ்பைக்கை ஏற்படுத்துகிறது.
பிரவுன் பிரட்
பிரவுன் பிரட்டும் ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் பெரும்பாலும் ஊட்டச்சத்து நன்மை குறைவாகவே இருக்கும்..
ஸ்மூத்திகள்
கடைகளில் வாங்கப்படு ஸ்மூத்திகள் பழ சர்க்கரைகள் மற்றும் சில நேரங்களில் செயற்கை சுவைகளால் நிரம்பியுள்ளன, இது கொழுப்பு அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
குறைந்த கொழுப்புள்ள பேக் செய்யப்பட்ட உணவுகள்
இயற்கை கொழுப்புகளை அகற்றி, சுவையை அதிகரிக்க சர்க்கரை சேர்க்கப்படுகிறது.. இது ஆரோக்கியமானது அல்ல. எனவே உடல் எடையை குறைக்க உதவாது..
சோயா பொருட்கள்
இது ஹார்மோன்களைக் குழப்பக்கூடும், குறிப்பாக அதிகமாக பதப்படுத்தப்பட்டால். சோயாவில் ஐசோஃப்ளேவோன்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் பிணைக்கப்பட்டு பலவீனமான ஈஸ்ட்ரோஜெனிக் அல்லது ஈஸ்ட்ரோஜெனிக் எதிர்ப்பு செயல்பாட்டை ஏற்படுத்தும்..
Read More : பீட்ரூட் ஜூஸ் நல்லது தான்.. ஆனால் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கவே கூடாது..!!