நீங்கள் வாங்கும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வரலையா..? இதோ ஒரே நிமிஷத்தில் சரிசெய்யலாம்..!!

Gas Subsidy 2025

மாத சம்பளம் பெறுபவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்யும்போது முழுத் தொகையையும் செலுத்திவிட்டு, பிறகு அரசு வழங்கும் மானியத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், மக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் சிலிண்டர் மானியம் திடீரென வருவது நின்று போகும். பலருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? என்பதே தெரிவதில்லை.


மானிய தடைக்கான முக்கியக் காரணம் : உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்காமல் இருப்பதுதான் இந்த குழப்பங்கள் ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எப்போதும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில்தான் மானியத்தை வரவு வைக்கும். எனவே, உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், சிலிண்டர் வாங்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு மானியம் கிடைக்காது. ஆனால், இந்தக் குடும்பங்களும் தங்கள் கேஸ் இணைப்பை ஆதாரோடு இணைப்பது கட்டாயம்.

ஆன்லைனில் மானிய நிலையை சரிபார்க்கும் முறை :

நீங்கள் மானியம் பெறவில்லை என்றாலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்து எந்தக் கணக்குக்கு மானியம் செல்கிறது என்று தெரியாமல் இருந்தாலோ, அதை ஆன்லைன் மூலம் எளிதாகச் சரிபார்க்கலாம்.

* முதலில், www.mylpg.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய 3 எல்.பி.ஜி நிறுவனங்களில், உங்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனத்தின் படத்தைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

* புதிய பக்கம் திறந்தவுடன், மேல் உள்ள ‘பார் மெனு’ பகுதிக்குச் சென்று ‘Give your feedback online’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* அதில், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய நீங்கள் அளித்த மொபைல் எண், வாடிக்கையாளர் ஐடி (Customer ID), மாநிலத்தின் பெயர் மற்றும் விநியோகஸ்தர் பற்றிய தகவல்களைப் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.

* அடுத்து, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்து, ‘Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்கவும்.

இப்போது உங்கள் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை நீங்கள் அதில் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு மானியம் வரவில்லை என்றால், அங்கேயே நீங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். அல்லது அரசின் அதிகாரப்பூர்வமான pgportal.gov.in என்ற தளத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம்.

Read More : மதுரையில் பேரதிர்ச்சி..!! துப்பாக்கியால் சுட்டு 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

CHELLA

Next Post

அதிகமாக போன் பயன்படுத்துவதால் இந்த உறுப்புகள் செயலிழக்கும் அபாயம்!. குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

Wed Oct 15 , 2025
நீண்ட நேரம் திரை பார்ப்பது கண்கள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது. தொடர்ந்து உட்கார்ந்து திரை பார்ப்பது குழந்தைகளின் உடல் செயல்பாடுகளைக் குறைக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் திரைகளைப் பார்த்துக்கொண்டே, படிப்பது, விளையாடுவது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது என பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் […]
kids using phone

You May Like