மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 உங்களுக்கு வரலையா..? இனி அந்த கவலை வேண்டாம்..!! சூப்பர் நியூஸ்..!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டிருந்தால், அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பின் மேலும் சிலருக்கு இந்த திட்டத்தில் பணம் வழங்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பின் புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.

இந்நிலையில் தான், மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கபட்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் கூட இது தொடர்பாக பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தில் கொடுக்க வேண்டும். 1.60 கோடி பேர் விண்ணப்பம் செய்தனர். 1.16 கோடி பேருக்கு இப்போது கொடுக்கிறோம். இதில் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் கொடுப்போம். இப்போது தேர்தல் என்பதால் கடினம். ஆனால், கண்டிப்பாக தேர்தல் முடிந்ததும் பணம் கொடுப்போம். கவலை வேண்டாம் என்று உறுதி அளித்துள்ளார்.

Read More : Lok Sabha | விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு..!! முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

Chella

Next Post

பள்ளியில் திரையிடப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’!!

Tue Apr 9 , 2024
இடுக்கி மறை மாவட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் கேரள பெண்கள் மதமாற்றம் […]

You May Like