மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. விருப்ப ஓய்வு பெறுவதில் அட்டகாசமான சலுகை..!!

Central govt staff 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சலுகைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. செப்டம்பர் 2-ஆம் தேதி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டுள்ள விதிகளின்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை செய்த பிறகு விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெற தகுதி பெறுகின்றனர்.


இதன் மூலம், முன்பு 25 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த சலுகை, இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகே கிடைக்கப்போகிறது. ஓய்வு பெறும் நாளில் பணியாற்றிய ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட தொகை, ஊழியருக்கு உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், ஓய்வுபெறும் போது:

  • இறுதித் தொகையில் 60% வரை திரும்பப் பெறுதல்,
  • அகவிலைப்படி,
  • ஓய்வு பணிக்கொடை,
  • விடுப்பை பணமாக்குதல்,

மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படும். விருப்ப ஓய்வு பெற்ற பிறகு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் உயிரிழந்தால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்த கணவர் அல்லது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read more: பாராசிடமால், டோலோ மாத்திரைகள் காய்ச்சலை குறைக்கவில்லையா?. அப்படியென்றால் என்ன செய்வது?. எது வேலை செய்யும்?.

English Summary

Double jackpot for central government employees.. Awesome offer on voluntary retirement..!!

Next Post

EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியிருக்கீங்களா..? தவணை செலுத்த தவறினால் உங்கள் ஃபோன் வேலை செய்யாது..!!

Wed Sep 17 , 2025
EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய […]
Smart Phone 2025

You May Like