வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தில் தனது 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கிச்சென்ற நபரின் கொடூர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் வரதட்சணை கொடுமைகள் அளவில்லாமல் அரங்கேறி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேறும் வரதட்சனை கொடுமைகள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றனர். இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கில் தான் பெற்ற 8 மாதமே ஆன ஆண் குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் உலா சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சஞ்சு தனது மனைவியிடம் பணம் மற்றும் கார் வாங்கி தர பலமுறை கேட்டு துன்புறுத்தியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “எனது திருமணம் 2023 இல் நடந்தது. நான் அங்கு சென்றபோது, அவர்கள் என்னை – என் மைத்துனர், மூத்த மைத்துனர், அனைவரையும் அடித்தார்கள். ‘ரூ. 2 லட்சமும் ஒரு காரும் கொண்டு வா’ என்று சொன்னார்கள். இதற்காக அவர்கள் ஒவ்வொரு முறையும் என்னை அடித்தார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஒரு சின்னக் குழந்தை இருக்கு, வெறும் 8 மாசமே ஆகுது, வரதட்சணை கேட்டு, அந்த சின்ன குழந்தையை தலைகீழா தொங்க விட்டு கிராமம் முழுவதும் ஊர்வலமா கொண்டுவந்தார்கள், என்கிட்ட பணம் இல்ல – எங்க இருந்து கொண்டு வருவேன்? அப்புறம் என்னை அடிச்சுக்கிட்டே குழந்தையைத் தூக்கில் போட ஆரம்பிச்சாரு. குழந்தையை தொங்கவிட்டு நாலு தடவை சுற்றினாரு. குழந்தைக்கு இப்போ உடம்பு சரியில்லாம போயிடுச்சு, இடுப்பு மூட்டு சிதைஞ்சு போச்சு. இப்போ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நான் ஏழை – நான் என்ன செய்ய முடியும்? போலீஸ்காரர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணவர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் சிறையில் அடைக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் தெரிவித்தார். மிலக் கானம் நிலைய பொறுப்பாளர் நிஷா கட்டானா தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “சஞ்சு மீது பிரிவு 151 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Readmore: அதிரடி.! இனி ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம்…!