மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ₹31000/- ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பி.இ/பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு உச்சபட்ச வயது வரம்பு 28 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வரை வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 25.03.2023 தேதியிலிருந்து 28.04.2023 தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்பிற்கு https://recruit.rites.com/frmRegistration.aspx அல்லது https://www.rites.com/ ஆகிய இணையதளங்களின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய drdo.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser5

Next Post

கிணற்றுக்கும் - தோட்டத்துக்கும் திருமணம்!... ஆட்சியர் தலைமையில் நடந்த சுவாரஸ்யம்!... சடங்கு சம்பிரதாயங்களுடன் கொண்டாட்டம்!

Sun Mar 19 , 2023
உத்தரப் பிரதேசத்தில் பழமையான கிணறு ஒன்றுக்கும் அதன் அருகில் உள்ள தோட்டத்திற்கும் கிராம மக்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்ட சம்பவம் சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியில் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று […]
up marriage

You May Like