உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் குடிபோதையில் இருந்த ஜோடி, நடுரோட்டில் இ – ரிக்ஷாவை நிறுத்திவிட்டு ஆபாச செயல்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில், கோரக்பூர் கிளப் முன்பாக, நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் ஓட்டுநரும் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். இந்த ஜோடி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஓட்டுநர் அரைகுறை ஆடையுடன், படுத்துக்கொண்டு அப்பெண்ணின் கையை பிடித்து ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மற்ற வாகனங்கள் ஹாரன் அடித்தபோதும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிகிறது. அவர்கள் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் சிலர் வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதைப் பார்த்த ஓட்டுநர் படுத்துக் கொண்டே இ-ரிக்ஷாவை நகர்த்தத் தொடங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்தப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகச் செயல்கள் ஈடுபட்ட நிலையில், போதையில் தள்ளாடியபடியே ரிக்ஷாவை எடுத்துச் சென்றனர்.
Readmore: ஒரு மாதத்திற்கு தினமும் மாதுளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?. இத்தனை நன்மைகளா?.



