அவசர மருத்துவ சேவை நிறுவனமான 108 ஆம்புலன்ஸ், தற்போது அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தவுள்ளது.
மருத்துவ உதவியாளர் பணி: பி.எஸ்சி நர்சிங், ஜி.என்.எம், அல்லது டி.எம்.எல்.டி போன்ற மருத்துவப் படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பில் அறிவியல் (Science) பிரிவில் (Biology, Zoology, Botany, Bio-Chemistry, Micro-biology, Bio-Technology) படித்தவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரு கட்டங்களாக இருக்கும். தேர்வானவர்களுக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் 3 வருடப் பழமையான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (Light Motor Vehicle Driving License) மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பேட்ஜ் (Public Transport Badge) வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும். தேர்வு முறை எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கண் பார்வை பரிசோதனை எனப் பல கட்டங்களாக இருக்கும்.
சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21,320 முதல் ரூ.24,580 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பதவிக்கு 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் விவரங்கள்: இந்தப் பணிகளுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்கள் அவசியம். நேர்காணல் 2025, செப்டம்பர் 7 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகம், கணபதி நகர், தஞ்சாவூர் (அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகில்).



