20 கிலோ வெடிபொருட்களுடன் ஈரான் ட்ரோன்கள்!… 9 மணிநேரத்தில் வெடிக்கும்!… இஸ்ரேல் மீது தொடங்கியது போர்!

Iran – Isreal war: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த டஜன் கணக்கில் 20 கிலோ வெடிப்பொருட்களுடன் ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தற்போது நேரடியாக தலையிட்டு உள்ளது. இத்தனை காலம் மறைமுகமாக ஹெஸ்புல்லா இயக்கம் வழியாக ஈரான் இஸ்ரேலை தாக்கி வந்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி போர் நடத்தி வந்தது.

ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கமும் இந்த போரில் களமிறங்கி இருந்தது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டு தாக்கி வந்தது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கியது. இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் மறைமுகமாக தலையிட்டு வந்த நிலையில் ஈரான் தற்போது நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

அந்தவகையில், 200க்கும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் 12 நிமிடங்களில் இஸ்ரேலை அடையமுடியும் என்றும் வான்வெளியில் ட்ரோன்கள் 9 மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்றே தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று ஈரானின் திசையில் இருந்து பல ஆளில்லா விமானங்கள் ஈராக்கின் சுலைமானியா மாகாணத்தின் மீது பறப்பதை சிலர் பார்த்ததாக பாதுகாப்பு துறையிடம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 200 ட்ரோன்கள் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Readmore: உச்சம் தொட்ட மாற்றம்!… ஆபத்தில் 200 கோடி குழந்தைகள்!… ஐ.நா. கடும் எச்சரிக்கை!

Kokila

Next Post

Covai: செய்தியாளர் சந்திப்பில் வந்த சத்தம்... வலியால் துடித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

Sun Apr 14 , 2024
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வரை சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்றது. […]

You May Like