திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் கலைஞர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் தான்.
2018ஆம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். 2020ஆம் ஆண்டு பேராசிரியர் மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவி சீனியரான துரைமுருகனுக்கு தரப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக துரைமுருகன் பொதுச்செயலாளர் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. துரைமுருகன் விலகலைத் தொடர்ந்து, அந்த பொறுப்பை ஜெகத்ரட்சகனுக்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும், மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக நியமிக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Read more: சர்க்கரை நோயாளிகள் பச்சை பட்டாணி சாப்பிடுவது நல்லதா..? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?



