கோடை காலத்தில் ஈசியாக உடல் எடையை குறைக்க இதை சாப்பிடுங்க..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் சாவாலான காரியம். உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது உணவில் கட்டுப்பாடாக இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதில் நீங்கள் உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். எனவே, இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த கோடையில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

தர்பூசணி: இந்த கோடையில் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், இந்த பழத்தை சாப்பிடுங்கள். உடல் பருமனை குறைப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கலோரிகள் மற்றும் சர்க்கரை மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த இப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பி இருக்கும். பசியை தூண்டாது. இதனால் உடல் எடை குறையும்.

வெள்ளரிக்காய்: கோடையில் இது மிக எளிதாக கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்தி எடையை எளிதில் குறைக்கிறது. கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நீரிழப்பு ஏற்படாது.

கிவி: கிவியில் மிகக் குறைந்த அளவு சர்க்கரையும், அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இதயம் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், கிவி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது.

ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த இந்த பழம், கோடை காலத்தில் எடை இழப்புக்கு ஒரு நல்ல வழியாகும். இது எடையைக் குறைப்பது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால், இதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது.

Read More : பிஃஎப் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1,00,000 கிடைக்கும்..!!

Chella

Next Post

RTE : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை..! கடைசி நாள் மீ 20..!

Mon Apr 22 , 2024
தங்கள் பிள்ளைகளை அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இன்று(ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையே கட்டணத்தை ஏற்கிறது. இந்த நிலையில் […]

You May Like