இவர்களுக்கு மட்டுமே மின்சார கட்டணம்‌ உயரும்‌…! எவ்வளவு தெரியுமா…? தமிழக முக்கியமான அறிவிப்பு…!

தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டது. இதனால்‌ கட்டண உயர்வின்‌ அளவு 4.7 %லிருந்து 2.18 % ஆக குறைக்கப்பட்டது.


இந்த குறைந்த உயர்விலிருந்தும்‌ பொதுமக்களைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும்‌ 2.18% உயர்வையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்று, மின்‌வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர்‌ ஆணையிட்டுள்ளார்‌.

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும்‌ இருக்காது. அதேபோல வேளாண்‌ இணைப்புகள்‌, குடிசை இணைப்புகள்‌, வீடுகளுக்கு 100 யூனிட்‌இலவச மின்சாரம்‌, கைத்தறி, விசைத்தறிகள்‌ போன்றவற்றுக்கு அளிக்கப்படும்‌ இலவச மின்சார சலுகைகள்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. வணிக மற்றும்‌ தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரைமிகக்‌ குறைந்த அளவில்‌ மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பாமாயிலில் சமைப்பவர்களா நீங்கள்!... அப்போ கவனமா இருங்க!... ஏன் தெரியுமா?

Fri Jun 9 , 2023
பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் விஷயம். பல வீடுகளில் தாளிப்பது உள்ளிட்ட சமையலின் அடிப்படை தேவைகளுக்கு பாமாயில் பயன்படுகிறது. ரேஷன் கடையில் நமக்கு விலை குறைவாக பாமாயில் கிடைக்கும். சிலர் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதற்காக பாமாயில் பயன்படுத்தமாட்டார்கள். சிலர் கடைகளுக்கு விட்டு விடுவார்கள். இதற்குக் காரணமே […]

You May Like