மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதல், அண்ணாமலைக்கு எந்த வகையான மாநில அல்லது தேசிய பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையில் மட்டுமே அவர் பாஜவில் உள்ளார். இதனால் கட்சி சார்பான நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறாமல் இருந்துவருகிறார். இதனிடையெ அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த இருவரையும் மீண்டும் கூட்டணியில் சேர்க்க அண்ணாமலை முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் மூலம் சில தகவல்களை டெல்லிக்கு அனுப்பியுள்ளார்.
குறிப்பாக அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கூட்டணியில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசி வரும் நிலையில் அவர்களை அண்ணாமலை அடிக்கடி சந்தித்து பேசுவது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதிமுகவில் தனக்கு கீழே இருக்கும் நிர்வாகிகள் தற்போது இந்த விஷயத்தை சுட்டி காட்டி தன்னிடம் கேள்வி எழுப்பியதாக நாகேந்திரனரிடம் கூறியுள்ளாராம். எடப்பாடி, இந்த தகவலை டெல்லிக்கு பாஸ் செய்ய வேண்டும் என சொன்னாராம்.
தற்போது தான் அதிமுகவிலிருந்து சில நிர்வாகிகளை வெளியேற்றி ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்த நான் முயன்று வரும் நிலையில் அண்ணாமலை இப்படி செய்வது கட்சியில் எனக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் மூலம் டெல்லி தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி செய்தி அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Read more: மாதம் ரூ.55 முதலீடு செய்தால் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?



