தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் இன்று காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதேபோல் தவெக தலைவர்கள் பலரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஈரோட்டில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த செங்கோட்டையன் பேசுகையில், கோபிசெட்டிபாளையத்தில் எனது வேட்புமனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது.
10 முறை போட்டியிட்டுருக்கிறேன். எனக்கு வேட்புமனு எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரியாதா? வேண்டும் என்றே ஒரு பெட்டிசன் போட்டங்கா.. ஆனால் அங்கே இருந்த ஐஏஎஸ் அதிகாரி இந்த பெட்டிசன் எல்லாத்தையும் கோர்ட்டில் போய் கொடுங்க.. வேட்புமனுவில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லிவிட்டார். விஜய் ஆதரவுடன் முதல்வர் ஆகி ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
பழனிசாமியின் இந்த முயற்சியை நான் முறியடித்தேன்.. இதனால் அவர் என் மீது கொலை வெறியில் இருக்கிறார்.. என் மீது அவருக்கு கடும் கோபம். 10 முறை தோல்வியை கண்ட பழனிசாமி என்னை பார்த்து துரோகி என்பார். நான் முதல்வராக ஆகி உங்களை கட்சியில் விட்டு தூக்கியிருந்தால் நான் துரோகி.. ஆனால் நான் உங்களுக்கு பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.. நான் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்னதால் தான் எனக்கு அவர் வைத்த பெயர் துரோகி என்றார்.
Read more: வெள்ளிக்கிழமை இதை செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து செல்வம் பெருகுமாம்..!



