விஜய் அறிவித்த வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி.. .கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு..!

cuddalore vijay

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.. இதுவரை சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.. 


தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. எனினும் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. 

இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.. விஜய் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.. விஜய் தாக்கல் செய்த அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக களமிறங்கிய பாரியின் மனுவில் பிழைகள் இருப்பதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாரியின் தந்தை நெடுஞ்செழியன் களமிறங்குகிறார்.

Read more: தோசை சாப்பிட்ட பிறகு 2 குழந்தைகள் உயிரிழப்பு; பெற்றோர் கவலைக்கிடம்..! குஜராத்தில் சோகம்..!

English Summary

Vijay’s declared candidate’s nomination rejected.

Next Post

தினமும் ரூ. 200 முதலீட்டில் ரூ. 20 லட்சம்.. கூட்டு வட்டியுடன் உங்கள் பணத்தை பெறுங்கள்..!

Tue Apr 7 , 2026
அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அதிக பணத்தை விட ஒழுக்கமும் காலமும் மிக முக்கியமானவை. நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, அதைத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் (compounding) சக்தியால் காலப்போக்கில் அது ஒரு பெரிய தொகையாக உருவெடுக்கும். பலருக்கும் சாத்தியமான வகையில், தினமும் வெறும் ரூ. 200 சேமிப்பதன் மூலமே, இறுதியில் […]
998694 rupees500

You May Like