முட்டை விலை 595 பைசாவாக உயர்வு…!

egg 2025 1

நாமக்கலில் ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. 2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதுவே, நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 14-ம் தேதி முட்டை விலை 590 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சூழலில் நேற்று என்இசிசி மண்டலத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, பண்ணைக்கொள்முதல் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 50 ஆண்டு கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ளதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.

Vignesh

Next Post

நிலம், வீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கே வர மாட்டீங்குதா..? இந்த நாளில் வராஹி தேவியை இப்படி வழிபடுங்க..!!

Sun Nov 16 , 2025
நிலம், வீடு, மனை தொடர்பான தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்றவை மனித வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனைகளாகும். இத்தகைய பூமி சார்ந்த சிக்கல்களில் இருந்து விரைவில் விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை அடையச் செய்யும் சக்தி வாய்ந்த தெய்வமாக வராஹி தேவி போற்றப்படுகிறார். இவர், லலிதா பரமேஸ்வரியின் ஐந்தாவது சக்தியாக, பஞ்சமி சக்தியாக விளங்குபவர். பூமியை ஆழத்திலிருந்து தம் கொம்புகளால் மேலே உயர்த்திய வராக அவதாரத்தின் […]
Varahi Amman 2025

You May Like