முட்டை விலை ஸ்டெடி… சிக்கன் விலை கிடுகிடு உயர்வு..!! அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் இதோ..!!

Egg 2025

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த கோழி இறைச்சி விலையில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை சந்தை நிலவரப்படி, முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, மொத்த விற்பனைச் சந்தையில் முட்டைக்கோழி கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போது 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அசைவ பிரியர்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


அதேவேளையில், கறிக்கோழி விலையில் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்வு காணப்படுகிறது. நாமக்கல் சந்தையில் 128 ரூபாய்க்கு விற்கப்படும் கறிக்கோழியின் விலை, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வரும்போது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனிடையே, அத்தியாவசிய தேவையாக இருக்கும் முட்டையின் விலையில் கடந்த சில நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு முட்டை 6.40 ரூபாய் என்ற நிலையான விலையிலேயே நீடித்து வருகிறது.

சில்லறை விற்பனை சந்தையை பொறுத்தவரை, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற முக்கிய நகரங்களில் ஒரு கிலோ சிக்கன் விலை 190 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை இடத்திற்கு ஏற்ப மாறுபட்டு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் வரத்து அதிகரிப்பைப் பொறுத்து விலையில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More : தமிழ்நாடே அதிர்ச்சி..!! 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்..!! கரூரில் பெரும் பதற்றம்..!!

CHELLA

Next Post

செஞ்சுரி அடித்த விலை..!! சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் தக்காளி..!! இன்றைய நிலவரம் இதோ..!!

Sun Dec 28 , 2025
சமையலறையின் அத்தியாவசியத் தேவையான தக்காளி, தற்போது ஏழைகளின் ஆப்பிள் என்ற நிலையிலிருந்து மாறி, விலையில் நிஜமான ஆப்பிளுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுவதால், பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். சந்தை நிலவரப்படி, சுமார் […]
tomato 2

You May Like