’மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வரும்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் வரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

’நடப்பு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் நிறைய ஆலோசனைகளை முடிக்க வேண்டியுள்ளது. இதில் முதன்மையாக வெளிப்படைத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கருப்புப் பணம் இதில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தின் சில அம்சங்களில் மேம்பாடு தேவை என்பதை ஒப்புக்கொண்ட நிதியமைச்சர், நல்ல ஆலோசனைகளைத் தொடர்ந்து அவை ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார். ஆக, எந்த வகையில் பார்ப்பினும் பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை கைவிடுவதாக இல்லை” என்று உறுதியாக கூறியுள்ளார்.

Read More : 16 வயது மாணவனை காரில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Chella

Next Post

Bird Flu | வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!

Sat Apr 20 , 2024
Bird Flu: கேரளாவில் உள்ள எடத்துவா கிராம பஞ்சாயத்து மற்றும் செருதானா கிராம பஞ்சாயத்தில் உள்ள வாத்துகளின் ரத்த மாதிரிகள் சிலவற்றில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல்(Bird Flu) பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் தொற்று […]

You May Like