அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை…!

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை.

தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்றைய தினம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருக்கக்கூடிய அம்மா மாளிகையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல்துறைக்கு பாலகிருஷ்ணன் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக சொல்லபடுகிறது.

தேர்தல் கண்காணிப்பு பணியில் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை பாயும் எனவும் பாலகிருஷ்ணன் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று மணியிலிருந்து நான்கு மணி வரை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சென்னையை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் நடத்த சில நாட்களே இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து தற்போது வரை சென்னையில் பன்னிரண்டு கோடி ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது மிக மிக குறைந்த பணமாக இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்து இருப்பதாக சொல்லபடுகிறது.

Vignesh

Next Post

Election 2024 | "ஓய்வூதியம் கொடுக்க காசில்லை; 150 கோடியில் சமாதி தேவையா.?"... கொந்தளித்த சீமான்.!!

Sun Apr 7 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்ற தேர்தல்களைப் போலவே இந்த […]

You May Like