நெருங்கும் தேர்தல்..!! தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நிறுத்தமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் நிறுத்தப்படும் என்று வெளியான தகவல்கள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வங்கிக் கணக்கின் வாயிலாக செலுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

எனவே, தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்டால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படும் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Read More : ’என் மகனுக்கு ஏன் சீட் கொடுக்கல’..!! திமுக தலைமை மீது சபாநாயகர் அப்பாவு அதிருப்தியா..?

Chella

Next Post

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...! விழிப்புணர்வு பதிவு...!!

Wed Apr 3 , 2024
வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் நேரத்தை குறிவைத்துதான் பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. நகைக்கு பாலீஸ் செய்வது, அம்மி கொத்துவது, எலக்ட்ரீஷியன் வேலை, பிளம்பர் வேலை என வீட்டை நாடி வரும் நபர்கள், சமயம் பார்த்து பெண்களை ஏமாற்றி பணம், நகை மற்றும் மற்ற பொருட்களைத் திருட்டிச்செல்கின்றனர். பெருகிவரும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க, பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். * வாசல் மற்றும் முக்கிய இடங்களில் காமிரா பொருத்துவது […]
Work From Home முறையை அதிகம் விரும்பும் இந்திய ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்..!!

You May Like