வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!… உலக எமோஜி தினம் இன்று!

வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளது. வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல விஷயங்களை பலருக்கும் புரியவைக்கின்றன. இத்தகைய எமோஜிகளின் அர்த்தங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு, நபர்களுக்கு, கலாச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் வேறுபடுகின்றன.

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு சில எமோஜிக்களை பரிமாறாமல் யாருக்கிடையேயும் எந்த உரையாடலும் நடப்பதில்லை. அதிகளவில் சொற்களைப் பயன்படுத்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த எளிதான வழி எமோஜிக்கள்தான். சமூக வலைத்தளங்கள் தற்போது உலகின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மொழிகளை மாற்றி சேவைகளை வழங்குகின்றன. ஆனால் உலகின் எந்த மொழிக்கும், நாட்டிற்கும் பொதுவாக பயன்படுத்தப்படுவது எமோஜிக்கள்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலக ஈமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. லண்டனை தளமாகக் கொண்ட எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்க் இந்த நாளை 2014 இல் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் முதல் இன்ஸ்டாகிராம் வரை, ட்விட்டர் முதல் பேஸ்புக் வரை எல்லா இடங்களிலும் எமோஜிகள் உள்ளன. உண்மையில் தற்போது, தலையணைகள், போர்வைகள், காபி குவளைகள், டி-ஷர்ட்கள் போன்றவற்றிலும் எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை.

1newsnationuser3

Next Post

சினிமாவை தாண்டி, சொந்த தொழில் செய்துவரும் குக் வித் கோமாளி நடிகர் காளையன்!... என்ன தொழில் தெரியுமா?... ரசிகர்கள் ஷாக்!

Mon Jul 17 , 2023
ஜிகர்தண்டா, சுல்தான், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் காளையன். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி-4 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் ஆகி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தாலும் காளையன் சொந்தமாக வேறொரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் முறுக்கு உள்ளிட்ட ஸ்னாக்ஸ் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம். அதில் மொத்தம் […]
actor kalayan cwc 2023

You May Like