மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 500
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
உதவித்தொகையாக ரூ. 9000 வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.newindia.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025
Read more: “பாமகவின் பொருளாளர் நான் தான்”..!! “ராமதாஸின் அறிவிப்பு செல்லாது”..!! திலகபாமா பரபரப்பு பேட்டி..!!