முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான தொழில்துறை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்னணு உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு, தொழில்நுட்ப ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொதுத்துறை, உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 13,409 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மொத்தம் ரூ.1,937.76 கோடி முதலீட்டில் பல பெரிய தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
PayPal மற்றும் AmericanExpress ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தின்போது எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகும். நான் எப்போதும் கூறுவது போல், நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில்லை, முதலீடுகளை அடிப்படையாக வைத்து அவற்றை வேலைவாய்ப்புகளாக மாற்றுகிறோம். புதிய முதலீடுகள் மற்றும் பல முக்கிய திட்டங்களின் விரிவாக்கங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Read more: எடை இழப்புக்கு ஊசி போடுகிறீர்களா?. உங்கள் பார்வையை இழக்க நேரிடும்!. ஆய்வாளர்கள் எச்சரிக்கை!