தமிழ்நாடு காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களுக்கு, காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்வது (Bomb Detection and Disposal Squad) போன்ற முக்கிய பிரிவுகளில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
காலிப் பணியிடங்கள்: ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆய்வாளர் (முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர்) – 2
உதவி ஆய்வாளர் (முன்னாள் நாயிப் சுபேதார்) – 14
தலைமை காவலர் (முன்னாள் ஹவில்தார்/ நாயக்) – 43
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்குக் கீழ்முள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
- விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும்.
- அதோடு, CME, புனே, அல்லது NSG, அல்லது BCAS ஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்புயில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
* ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம்.
* இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு, அல்லது CME இன் EDD பிரிவு, அல்லது NSG இன் BD பிரிவு, அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் (NBDC), அல்லது விமான நிலையங்களின் BD பிரிவுகள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் BDD தொடர்பான பயிற்சி அளிக்கும் திறன் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் மருத்துவத் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
ஆய்வாளர்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
உதவி ஆய்வாளர்: ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை
தலைமை காவலர்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்கள், கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தபால் மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பங்கள் கூடுதல் காவல்துறை இயக்குநர் (Additional Director General of Police) அவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் காவல்துறை இயக்குநர்,
செயலாக்கம், மருதம், எண். 17, போட் கிளப் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025.
Read more: கரூர் பெருந்துயரம்.. விஜய்க்கு அடுத்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..