தமிழ்நாடு சமூக நலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. ரூ. 35,000 சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..

job

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) தற்காலிகமாக பணியாற்றக் கூடிய மைய நிர்வாகி (Centre Admin) மற்றும் களப்பணியாளர் (Case Worker) பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொகுப்பூதிய அடிப்படையில் நடைபெறுகின்றன.


பணி 1: மைய நிர்வாகி (Centre Admin)

பணியிடங்கள்: 1

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டதாரி (MSW / Master of Law / Master of Psychology / Sociology)

தொகுப்பூதியம்: ரூ. 35,000/– மாதம்

முக்கிய தகுதிகள்:

  • திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்
  • 24×7 பணியாற்ற விருப்பம்
  • 181 மற்றும் பிற உதவி எண்ணுகளுக்கு பதில் அளிக்கும் திறன்
  • அரசு திட்டங்களை பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் நிறைவேற்ற ஆர்வம்

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி 2: களப்பணியாளர் (Case Worker)

பணியிடங்கள்: 1

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டதாரி (MSW / Bachelor or Master in Law / Psychology / Sociology)

தொகுப்பூதியம்: ரூ. 18,000/– மாதம்

முக்கிய தகுதிகள்:

  • திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள்
  • குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்
  • 24×7 பணியாற்ற விருப்பம்
  • 181 மற்றும் பிற உதவி எண்ணுகளுக்கு பதில் அளிக்கும் திறன்
  • அரசு திட்டங்களை பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் நிறைவேற்ற ஆர்வம்

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்ப படிவத்தை https://tiruppur.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் கீழ்காணும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண் 35,36, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்

கடைசி தேதி: 22.10.2025, மாலை 5.30 மணி.

Read more: தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்..? லட்சங்களைத் தாண்டிச் செல்லும் தங்கத்தின் உண்மையான விலை இதுதான்..!

English Summary

Employment for women in the Tamil Nadu Social Welfare Department.. Rs. 35,000 salary..!! Apply immediately..

Next Post

“இது நடந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது..” அதிமுக முன்னாள் அமைச்சர் பரபர தகவல்!

Tue Oct 21 , 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் […]
12166266 rbudhayakumar 1

You May Like