ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அனைத்து தப்பிக்கும் வழிகளையும் தடுக்கும் வகையில் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் ஒரு குகைக்குள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. இதையடுத்து உடனடியாக ஒரு தீவிர துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
அந்த இரண்டு பயங்கரவாதிகளின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தினர். அவர்களின் நிலை உறுதி செய்யப்பட்டதும், பாதுகாப்புப் படையினர் அந்த அச்சுறுத்தலை முறியடிக்க ராக்கெட் லாஞ்சரைப் பயன்படுத்தினர். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



