தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று சோதனை நடத்தியது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. அனில் அம்பானி மிகப்பெரிய பணமோசடி செய்ததாகவும், அவர் ஒரு மோசடி நபர் என்று எஸ்பிஐ குற்றம்சாட்டிய நிலையில், இந்த சோதனை நடந்துள்ளது.. நிதி முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பாக சோதனை நடந்ததாக கூறப்படுகிறது..
எனினும் இந்த சோதனை குறித்து ED இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ED அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அனில் அம்பானியின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவன நிறுவனங்களில் சோதனை நடந்து வருகிறது.. குறிப்பாக அம்பானி குடியிருப்பு வளாகங்கள் உட்பட 40 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
முன்னதாக இந்த வார தொடக்கத்தில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அனில் அம்பானியை மோசடி நபர் என்று தெரிவித்திருந்தது.. மேலும் சிபிஐயிடம் புகார் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் திங்களன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
மோசடி ஆபத்து மேலாண்மை குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிமுறைகள் மற்றும் மோசடிகளை வகைப்படுத்துதல், அறிக்கையிடுதல் மற்றும் நிர்வகித்தல் குறித்த வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, ஜூன் 13, 2025 அன்று அனில் அம்பானியின் R.com நிறுவனங்கள் மோசடி என வகைப்படுத்தப்பட்டதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.