பொறியியல் மாணவர் சேர்க்கை… 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! அமைச்சர் தகவல்…!

college 2025 1

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்பவும். நவீன தொழில்நுட்பத்திற்கேற்பவும், 12 பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள். 06.06.2025 வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால், மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது theacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More: முக்கிய அறிவிப்பு…! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜுன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு…!

Vignesh

Next Post

உக்ரைனுடனான போரை நிறுத்த புதின் மறுப்பு!. ரஷ்யா விதித்த நிபந்தனையால் மேற்கத்திய நாடுகள் கோபம்!.

Tue Jun 3 , 2025
போர் நிறுத்துவது தொடர்பாக, ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சு நடத்தினர். முதற்கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இந்த பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஇருந்தது. ஆனால், எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என, ரஷ்யா தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: […]
ukraine vs russia

You May Like