“விஜய் ஆதரவுடன் முதல்வராகி, 5000 கோடி சம்பாதிக்க இபிஎஸ் பிளான் போட்டார்..” செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!

sengottaiyan eps

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் ஈரோடு வேமாண்டம்பாளையத்தில் போது தவெக நிர்வாகி செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார்..


அப்போது பேசிய அவர் “ விஜய் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று இபிஎஸ் நினைத்தார்.. 10 முறை அதன் மூலம் 5000 கோடி ரூபாய் சம்பாதிக்க இபிஎஸ் திட்டமிட்டார்.. ஆனால் நான் அதனை முறியடித்ததால் எடப்பாடி பழனிசாமி என் மீது கொலை வெறியில் இருக்கிறார்.. 10 முறை தோல்வி கண்டவர் இபிஎஸ்.. அவர் இன்று என்னைப் பற்றி பேசுகிறார்..

அவர் என்னை துரோகி என்று சொல்கிறார்.. நான் முதல்வர், பொதுசெயலாளர் பதவியை விட்டுக் கொடுத்ததால் கிடைத்த பரிசு தான் துரோகி பட்டம்.. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தவன் துரோகி.. எனக்கு பின் கட்சிக்கு வந்து பொதுசெயலாளர் ஆன பின்னர் கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார்..

என்னை இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.. ஆனால் மக்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியவில்லை.. மக்கள் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு என்னை வெற்றி பெற வைக்க நினைக்கின்றனர்.. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : “நான் MLA ஆனதும் மதுரை மக்களுக்கும் டெய்லி கறி விருந்து தான்..!” சுந்தர்.சி உறுதி..

RUPA

Next Post

இந்த ராசிக்காரர்கள் தங்கத்துடன் சேர்த்து நிலத்தையும் வாங்குவார்ககள்.. ஜாக்பாட் உறுதி..!

Thu Apr 9 , 2026
ஜோதிட சாஸ்திரத்தில், அதிர்ஷ்டம் என்பது கிரகங்களின் பெயர்ச்சி அல்லது சேர்க்கையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்நிலையில், விரைவில் பல கிரகங்களின் சேர்க்கையின் காரணமாகச் சில சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இதன் விளைவாக, குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு நிகழும் அனைத்தும் பொன்னாகப் பிரகாசிக்கும். இப்போது, ​​அந்த ராசிகள் எவை என்பதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம். ஏப்ரல் மாதத்தில், கிரகங்களின் நகர்வு மற்றும் சேர்க்கையின் காரணமாகப் பல ‘ராஜ யோகங்கள்’ உருவாகவுள்ளன. இதுமட்டுமின்றி, 4 ராசிக்காரர்களுக்கு […]
navarathri zodiac

You May Like