2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
அதே போல் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கிடையே மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய நடிகர் சுந்தர்.சி, நான் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததும் இந்த தொகுதியிலா என்று கேட்டு எதிர்ப்பு கிளம்பியது.
அவரை எதிர்த்து போட்டியிட முடியாது என்றனர். அவர் என்ன எம்ஜிஆரா, அவர் பிடிஆர்தான். திமுகவினரிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்காகத்தான் இருக்கிறது. என்னை வெளியூர்காரன் என்கிறார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் இதுவரை என்ன சாதித்தனர். இந்த பகுதி மக்கள் தங்கள் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்ததே இல்லை என்கிறார்கள்.
நான் வென்றால் மதுரை மீனாட்சி கோவில் அருகே உள்ள இறைச்சிக் கடைகளை மூடுவேன் என கூறியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மீதி 6 நாளும் கறி சோறு சாப்பிடுபவன், நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனா மக்களுக்கு தினமும் கறி விருந்து அளிப்பேன் என பேசினார்.
Read more: AI புரட்சிக்கு தயாராகும் வெர்ஸே இன்னோவேஷன்.. புதிய CPTO ஆக பிரசன்னா பிரசாத் நியமனம்..!



