சட்டரீதியான நடைமுறை தெரியாத EPS ஒரு அரைவேக்காடு..!! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

EPS Ragupathi 1

ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது? அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? என விமர்சித்தார்.


இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார். உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான்.

அந்த SIT தமிழ்நாடு காவல்துறைகோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த SIT வேறு மாநில அதிகாரிகளோ ஒன்றிய அரசின் அதிகாரிகளோ இல்லை. அவர்கள் தமிழ்நாடு அரசின் காவல்துறை தானே? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் SIT குழு சிறப்பாக செயல்பட்டது என்றால் திமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று தான் பொருள்.

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தது திமுக அரசின் காவல்துறை. அவர் ஜாமின் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது திமுக அரசின் வழக்கறிஞர்கள். வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் நியமித்த SIT குழு பெண் அதிகாரிகள் மூவரும் அவர்களுக்கு துணையாக இருந்த விசாரணை குழுவும் திமுக அரசின் காவல்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்.

இப்படி, திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி ஏன் எரிகிறது? உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது” என கூறியுள்ளார்.

Read more: DRDO-வில் 148 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Next Post

Vastu Tips: சூரியன் அஸ்தமனத்துக்குப் பிறகு இதை செய்யாதீங்க.. குடும்பத்தில் கஷ்டம் மற்றும் இழப்பு நேரிடலாம்..!!

Wed May 28 , 2025
தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்.  இரவில் நகங்களை வெட்டுவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் பக்தர் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுவதில்லை. மேலும், ஒருவர் […]
sunset

You May Like