23 வருஷத்துக்கு அப்புறமும் இந்த “டயலாக்” உங்களுக்கு மட்டும் தான் – ரம்யா கிருஷ்ணன்

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கும் இந்த படம் ரஜினியின் 169 வது படமாகும். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ஜெயிலர் படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் யோகிபாபு, காமெடி நடிகருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை ரஜினியிடம் அதிகம் இருப்பதாக தெரிவித்தார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கூறும்போது, “ரஜினி மாமா வணக்கம்” அவர் கூட படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, அவர் simple சூப்பர்ஸ்டார் என்றும் தெரிவித்தார்.

இவர்களை தொடர்ந்து பேசிய ரம்யா கிருஷ்ணன், 23 வருஷத்துக்கு அப்புறமும் இந்த டயலாக் உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று படையப்பா பட வசனமான ” வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்களை விட்டு போகல” என்று கூறினார். படத்தின் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட அனைவரும் ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்த தெரிவித்திருந்தனர்.

Newsnation_Admin

Next Post

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஆயிஷா..!! விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம் இத்தனை லட்சங்களா..?

Mon Dec 12 , 2022
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆயிஷா வெளியேறியுள்ள நிலையில், அவரின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், நேற்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேறி உள்ளார். சின்னத்திரை நடிகையான இவர், விஜய் டிவியில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இயக்குனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். அதன் […]
BB Tamil..!! பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!! ரசிகர்கள் நிம்மதி..!!

You May Like