ஜாலி…! 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்…! அரசு அறிவிப்பு…!

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

காற்றின் தான் மிகவும் மோசமாக மாறி வருகிறது இதனால் அரசு வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் செவ்வாய்கிழமை வரை 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல கவுதம் புத் நகரின் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் தர்மவீர் சிங் பிறப்பித்த உத்தரவில், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் பள்ளிகளுக்கு கூறப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மெகா அறிவிப்பு...! வருவாய்த் துறையில் 2,748 காலிப்பணியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்.‌‌..!

Fri Nov 4 , 2022
தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள். தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு என 2748 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 22 முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்ச […]

You May Like