விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை ஒட்டி பலர் கடை விரித்துள்ளனர், தேர்தல் முடிந்த உடனே கடையை காலி செய்துவிடுவார்கள்.. மிட்டாய் வாங்கித் தருகிறேன் எனக் கூறி திருவிழாவில் கடத்தும் கும்பலை போல் இங்கும் சிலர் இருக்கிறார்கள்..
ED ரெய்டில் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏமாற்றி கடத்தும் கும்பலும் இங்கு உள்ளது.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு முரட்டு அடிமையாக மாறிவிட்டார். பிரதமர் மோடி, அமித்ஷா கால்களை பார்த்து நடந்தால் முட்டுச்சந்தில் போய் நிற்க முடியும். வழக்குகளை காட்டி மிரட்டும் பாஜகவின் மிரட்டல்கள் திமுகவிடம் செல்லாது.. திமுக 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முதல்வர் நமக்கு டார்கெட் கொடுத்துள்ளார்.. அதை செய்து காட்ட வேண்டும்.. அரசியல் அறிவே இல்லாத சில அட்டைகள் என்ன தான் உளறினாலும் களத்தில் ஜெயிக்கப் போவது நமது தலைவர் தான்..



