ஆஹா!. குழந்தை பெறும் பள்ளி மாணவியர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கும் அரசு!.

monday born baby 11zon

ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது.


பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கடந்தாண்டு முதல் பாதியில் ரஷ்யாவில் வெறும், 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. 25 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு என ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவின், 10 மாகாணங்களில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவியர் குழந்தை பெற்று வளர்ப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித் தொகையை அந்நாட்டு அரசு வழங்குகிறது. 43 சதவீத ரஷ்யர்கள் இந்தக் கொள்கையை ஆதரித்துள்ளனர்.

Readmore: பெரும் சோகம்!. இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டித்தீர்க்கும் அதி கனமழை!. பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு!. ரூ.541 கோடி சேதம்!

KOKILA

Next Post

ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கும் முதல்வர்...!

Sun Jul 6 , 2025
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ’உங்களுடன் ஸ்டாலின்’ […]
Mk Stalin Tn Govt 2025

You May Like